சர்மரோக நிவாரண மருந்துகள் - ஆசிரியர் கே.எஸ்.லட்சுமணன். இந்நூலில், சொரி, சிறங்கில் தொடங்கி பல்வேறு சரும நோய்களுக்கு விரிவான ஆனால் எளிய சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன. பெரும்பாலான மருந்துகள், நகரங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைகளையும் கடைச் சரக்குகளையும் கொண்டு அவரவர் கங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். சில மற்ற எந்த நூல்களிலும் காணக் கிடைக்காத சிகிச்சைகள்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல், நூல் சிறியதானாலும், அதில் உள்ள விஷயங்கள் மிகவும் பயனுள்ளவை. பெரும்பாலான சரும நோய்கள் தொற்று நோய்களாக இருப்பதால், இந்நூலை அனைத்து இல்லங்களிலும் கைவசம் வைத்திருப்பது அத்தியாவசியமானது.</br></br>